கடன் வாங்கி தருவதாக கூறி முதியவரிடம் ரூ. 17 லட்சம் மோசடி செய்தவர் கைது

கோபாலகிருஷ்ணன் கேட்டபோது வெங்கடேஷ் மிரட்டல் விடுத்துள்ளார்.
கடன் வாங்கி தருவதாக கூறி முதியவரிடம் ரூ. 17 லட்சம் மோசடி செய்தவர் கைது
Published on

சேலம் மாவட்டம் ஏற்காடு வாழவந்தி கீரைக்காடு பகுதியை சேர்ந்தவர் கோபாலகிருஷ்ணன் (75). இவர் வங்கியில் சொத்தை அடமானம் வைத்து கடன் வாங்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

ரூ.5 கோடி கடன்

அப்போது அவரது உறவினர் அசோக் என்பவர் மூலம் சேலம் செவ்வாய்ப்பேட்டையை சேர்ந்த வெங்கடேஷ் என்ற வெங்கடசுப்பிரமணியன் வங்கியில் ரூ. 5 கோடி கடன் வாங்கி தருவதாக கூறினார்.

அதனை நம்பிய கோபாலகிருஷ்ணன் தனது மனைவி பெயரில் உள்ள சொத்து பத்திரங்கள், 4 காசோலைகள் மற்றும் அடையாள அட்டைகளையும் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அவரிடம் கொடுத்தார்.

ஆனால் தற்போது வரை அவர் கூறியபடி கடன் வாங்கி கொடுக்கவில்லை. மேலும் கோபாலகிருஷ்ணன் கொடுத்த காசோலை மூலம் கோபாலகிருஷ்ணன் மற்றும் அவரது மனைவி வங்கி கணக்குகளில் இருந்தும் ரூ.17 லட்சத்து 35 ஆயிரம் பணத்தையும் எடுத்து மோசடி செய்துள்ளார்.

இது குறித்து கோபாலகிருஷ்ணன் கேட்டபோது வெங்கடேஷ் மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்த புகாரின் பேரில் செவ்வாய்ப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து வெங்கடேசை கைது செய்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com