திறந்த வெளியில் இறைச்சி விற்பனைக்கு தடை- மத்திய பிரதேச முதல்வர் உத்தரவு

3 மாநிலங்களிலும் 3 புதிய முகங்களை முதலமைச்சர் பதவிக்கு பா.ஜனதா மேலிடம் தேர்வு.டிசம்பர் 15ம் தேதி முதல் 31ம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ளப்படும்.
திறந்த வெளியில் இறைச்சி விற்பனைக்கு தடை- மத்திய பிரதேச முதல்வர் உத்தரவு
Published on

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், மிசோரம், தெலுங்கானா, சத்தீஸ்கர் ஆகிய 5 மாநிலங்களில் சட்டசபைக்கு நடந்த தேர்தலில் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர் ஆகிய 3 மாநிலங்களிலும் பா.ஜனதா ஆட்சியை பிடித்து சாதனை படைத்தது.

இந்த 3 மாநிலங்களிலும் 3 புதிய முகங்களை முதலமைச்சர் பதவிக்கு பா.ஜனதா மேலிடம் தேர்வு செய்திருக்கிறது.

மத்திய பிரதேசத்தில் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்து வரும் பா.ஜனதா இந்த தடவை அதிக இடங்களை கைப்பற்றி இருக்கிறது. அங்கு மோகன் யாதவ் புதிய முதல்-மந்திரியாக பொறுப்பேற்றார்.

இந்நிலையில், அம்மாநிலத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான முதல் மாநில அமைச்சரவைக் கூட்டம் இன்று நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், இறைச்சி, மீன், முட்டைகளை திறந்த வெளியில் விற்பனை செய்யத் தடை விதிக்கப்படும் என்று அம்மாநில முதல்வர் மோகன் யாதவ் தெரிவித்துள்ளார்.

மேலும், தடை விதிப்பது தொடர்பாக உணவுத் துறை, காவல்துறை மற்றும் உள்ளூர் நகர்ப்புற அமைப்புகளால் டிசம்பர் 15ம் தேதி முதல் 31ம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ளப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com