‘மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை’ - உறுதிசெய்த டிஎன்ஏ அறிக்கை

ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
‘மாதம்பட்டி ரங்கராஜ்தான் தந்தை’ - உறுதிசெய்த டிஎன்ஏ அறிக்கை
Published on

பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டாவின் குழந்தைக்கு சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் தான் தந்தை என்பது மரபணு (DNA) சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஜாய் கிரிசில்டா விடுத்த கோரிக்கையை ஏற்று, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு சோதனை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சோதனையில் உண்மை உறுதி செய்யப்பட்டதை அடுத்து, வழக்கறிஞர் கமிஷனர் இந்த அறிக்கையை ஓய்வுபெற்ற நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான மத்தியஸ்தக் குழுவிடம் வழங்கியதாக நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் மத்தியஸ்த நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக மாதம்பட்டி ரங்கராஜ், ஜாய் கிரிசில்டா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, வழக்கின் விசாரணையை, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, ஜூன் 8 ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.

முன்னதாக நடைபெற்ற விசாரணையில், "டிஎன்ஏ சோதனையில் நான்தான் தந்தை என தெரியவந்தால், குழந்தையை கவனிக்கும் பொறுப்பை வாழ்நாள் முழுவதும் ஏற்க தயார்" என்று ரங்கராஜ் தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com