TN Assembly Election: வேட்பு மனுவை தாக்கல் செய்தார் மா.சுப்பிரமணியன்

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.
TN Assembly Election: வேட்பு மனுவை தாக்கல் செய்தார் மா.சுப்பிரமணியன்
Published on

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற ஏப்ரல் 23-ந்தேதி நடக்கிறது. வாக்கு எண்ணிக்கை மே 4ம் தேதி நடக்கிறது.

தேர்தலையொட்டி தமிழகத்தில் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்குகிறது.

தமிழகத்தில் களம் காணும் திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி, நாதக, தவெக ஆகிய கட்சிகள் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்டனர்.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் இன்று தொடங்கிய நிலையில், வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்து வருகின்றனர்.

அந்த வகையில்ண, திமுக சார்பில் சென்னை சைதாப்பேட்டை சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் மா.சுப்பிரமணியன் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

கிண்டில் உள்ள வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் மா.சுப்பிரமணியன் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com