எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் - கியாஸ் தட்டுப்பாடு அச்சம் விலகல்

நாமக்கல்லை தலைமையிடமாக கொண்ட எல்.பி.ஜி கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது.
எல்.பி.ஜி. டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ் - கியாஸ் தட்டுப்பாடு அச்சம் விலகல்
Published on

தமிழ்நாடு, கேரளம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, புதுச்சேரி உள்ளிட்ட மாநிலங்களை உள்ளடக்கியது தென் மண்டல எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம்.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் வாடகை பாக்கியை வழங்காததால் இன்று காலை முதல் 1,000 எல்.பி.ஜி. கியாஸ் டேங்கர் லாரிகளில் லோடு ஏற்றாமல் ஆங்காங்கே நிறுத்தி வைத்து நாமக்கல்லை தலைமையிடமாக கொண்ட எல்.பி.ஜி கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கம் போராட்டத்தில் ஈடுபட்டது.

இதனால் தென் மாநிலம் முழுவதும் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் நிலை உருவானது.

இந்நிலையில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் அதிகாரிகள், எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இந்த பேச்சுவார்த்தையில், நிலுவைத் தொகை விரைவில் வரவு வைக்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. இதனை அடுத்து லாரி உரிமையாளர்கள் தங்களது போராட்டத்தைக் கைவிட்டனர்.

எல்பிஜி டேங்கர் லாரி உரிமையாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டம் தற்காலிகமாக வாபஸ் பெறப்படுவதாக தென்மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் சுந்தர்ராஜ் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com