

தமிழக - கேரளா எல்லையில் உள்ள இடுக்கியில் 5000 அடி உள்ள மலை பகுதியில் மங்கலதேவி கண்ணகி கோவில் அமைந்துள்ளது.
ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே திறக்கப்படும் இந்தக் கோவிலில், கேரளா மற்றும் தமிழக அரசுகள் இணைந்து இன்று நடத்திய சித்ரா பௌர்ணமி விழாவிற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்தனர்.
சாமி தரிசனம் முடித்து மாலை 5 மணிக்கு மேல் பக்தர்கள் மலைப் பாதையில் வாகனங்களில் இறங்கிக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியது.
இதில் மொத்தம் 11 பேர் காயமடைந்துள்ளனர். இதில் தமிழகத்தைச் சேர்ந்த 10 பக்தர்கள் மற்றும் குமுளி காவல் நிலையத்தை சேர்ந்த அன்சார் என்ற ஒரு காவலர் அடங்குவர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக குமுளி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
இதன்பின் தேனி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். தற்போது அனைவரது நிலையும் சீராக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.