விஜய் முதலமைச்சராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க டெல்லியில் இருந்து புறப்பட்டார் ராகுல் காந்தி

தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் இன்று தமிழக முதலமைச்சராக பதவி ஏற்கும் விழாவில் ராகுல் காந்தி கலந்து கொள்கிறார்.
விஜய் முதலமைச்சராக பதவி ஏற்கும் விழாவில் பங்கேற்க டெல்லியில் இருந்து புறப்பட்டார் ராகுல் காந்தி
Published on

தமிழக சட்டசபை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களை பிடித்தது. காங்கிரஸ், இரண்டு இடது சாரி கட்சிகள், விசிக, ஐ.யு.மு.லீ. ஆதரவுடன் ஆளுநரிடம் நேற்று ஆட்சி அமைக்க கோரினார். அவர் இன்று காலை 10 மணிக்கு பதவி ஏற்க அழைப்பு விடுத்துள்ளார். இதனைத் தொடர்ந்து த.வெ.க. தலைவர் விஜய் இன்று காலை தமிழக முதல்வராக பதவி ஏற்க உள்ளார்.

காங்கிரஸ் த.வெ.க. அமைச்சரவையில் இடம் பெறுகிறது. இதனைத் தொடர்ந்து விஜய் பதவி ஏற்பு விழாவில் ராகுல் காந்தி பங்கேற்பார் என்று நேற்று அதிகாரப்பூர்வாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் விஜய் முதலமைச்சராக பங்கேற்கும் விழாவில் கலந்து கொள்வதற்காக ராகுல் காந்தி டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு புறப்பட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com