குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த கொழிசாளை மீன்கள்

கணவாய், இறால் போன்ற மீன்கள் சீசன் இல்லாத நிலையில் கொழிசாளை, நாக்கண்டம் போன்ற மீன்களை அதிக அளவில் பிடித்து வருகின்றனர்.வரத்து அதிகரிப்பால் வியாபாரிகள் அதிக அளவில் வாங்க ஆர்வம் காட்டாத நிலையில் மீன்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது.
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த கொழிசாளை மீன்கள் கோழி தீவனத்திற்காக விற்பனை செய்யப்படுகிறது
குளச்சல் மீன்பிடி துறைமுகத்தில் குவிந்த கொழிசாளை மீன்கள் கோழி தீவனத்திற்காக விற்பனை செய்யப்படுகிறது
Published on

குளச்சல்:

கன்னியாகுமரி மாவட்டத்தில் குளச்சல், முட்டம், மீன்பிடி துறை முகங்களை தங்குதளமாக கொண்டு சுமார் 500-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். சுமார் 7 முதல் 15 நாட்கள் வரை நடுக்கடலில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபடும் விசைப்படகு மீனவர்கள் பெரும்பாலும் ஏற்றுமதி ரக மீன்களான கணவாய், இறால், கிளிமீன் போன்ற மீன்களை பிடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

தற்போது கணவாய், இறால் போன்ற மீன்கள் சீசன் இல்லாத நிலையில் கொழிசாளை, நாக்கண்டம் போன்ற மீன்களை அதிக அளவில் பிடித்து வருகின்றனர்.

இன்று குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு கரை திரும்பிய விசைப்படகுகளில் டன் கணக்கில் கொழிசாளை மீன்கள் பிடிபட்டிருந்த நிலையில் அவைகள் விற்பனைக்காக துறைமுகத்தில் மலைபோல் குவிக்கப்பட்டிருந்தன.

வரத்து அதிகரிப்பால் வியாபாரிகள் அதிக அளவில் வாங்க ஆர்வம் காட்டாத நிலையில் மீன்களின் விலை கடுமையாக வீழ்ச்சியடைந்தது.

இந்த நிலையில் சாதாரணமாக 1 கிலோ 50 ரூபாய்க்கு விற்பனை ஆகும் கொழிசாளை மீன்கள் இன்று 20 ரூபாய்க்கு விலை சரிந்து கோழி தீவனத்திற்காக விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com