என் மலர்
தமிழ்நாடு
மழையால் ஏற்பட்ட ஈரப்பதம் - அடுத்தடுத்து கீழே விழுந்த வாகன ஓட்டிகள்!
- சுரங்கப்பாதையினுள் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், மழையால் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது.
- தொடர்ந்து விபத்துகள் நிகழ்ந்து வருவதால், சாலையை உடனே சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
சென்னை கொரட்டூர் ரெயில்வே சுரங்கப்பாதையில் வாகனங்கள் அடுத்தடுத்து விபத்தில் சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
நேற்று காலை இப்பகுதியில் பள்ளி மாணவர்கள், போலீசார் உட்பட பலர் வாகனங்களில் இருந்து தவறி விழுந்தனர்.
சுரங்கப்பாதையினுள் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டுள்ள நிலையில், மழையால் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது. இதனால், சாலையில் பிடிப்பு இல்லாமல் வாகன ஓட்டிகள் அடுத்தடுத்து வழுக்கி விழுந்து விபத்தில் சிக்கி வருகின்றனர்.
தொடர்ந்து விபத்துகள் நிகழ்ந்து வருவதால், சாலையை உடனே சீரமைக்க வேண்டுமென வாகன ஓட்டிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.
மழையின்போது சுரங்கப்பாதையில் செல்லும்போது கவனமாக இருங்கள். மெதுவாக செல்லுங்கள் என்றும் வாகன ஓட்டிகள் தெரிவித்தனர்.
Multiple people including school children, policemen slip on the wet Korattur subway today morning. @chennaicorp , highways , on it to fix the subway and make it rough. #ChennaiRains be careful while riding on the subway. Go slow. pic.twitter.com/aHTOQ6FxZ3
— Omjasvin M D (@omjasvinMD) December 8, 2022