

திலீபன் என்பவர் சிங்கப்பெருமாள் கோவில், சின்ன செங்குன்றம் வண்டிக்காரன் தெருவை சேர்ந்தவர்.
இவர் தனியார் நிறுவன ஊழியர்.
கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர் குடியிருப்பில் வசிக்கும் தன் பெரியம்மா சரஸ்வதியை காணவில்லை என கூடுவாஞ்சேரி காவல் நிலையத்தில் கடந்த ஏப். 29-ம் தேதி புகார் அளித்துள்ளார்.
போலீசார் விசாரணையில் ஈடுபட்ட நிலையில் அந்த பகுதில் உள்ள சிசிடிவியை பார்க்கும் போது சரஸ்வதியின் எதிர்வீட்டில் இருக்கும் வினோத்குமார் மற்றும் கொடைக்கானலில் வசிக்கும் அவரது நண்பர் தீபன் சக்ரவர்த்தியும் சேர்ந்து மூதாட்டியை கொலை செய்தது தெரிய வந்தது.
இதையடுத்து கொலை செய்துவிட்டு இருவரும் தலைமறைவாக இருப்பதும் தெரியவந்துள்ளது. கூடுவாஞ்சேரி காவல்நிலையம் கொடைக்கானல் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்த நிலையில் இரு காவல் நிலையமும் வலை வீசி தேடுகின்றனர்.
போலீசார் இருவரின் மொபைல் போன் சிக்னலையம் கண்டறியும்போது தீபன் சக்ரவர்த்தி கொடைக்கானலில் இருப்பதை கண்டறிந்து கைது செய்தனர்.
தீபன் என்பவரிடம் விசாரணை நடத்தியபோது சரஸ்வதி மூதாட்டியின் மூக்கு, வாயை பொத்தி கொன்றுவிட்டு அவர் அணிந்திருந்த 7 பவுன் நகையையும் பறித்ததாக தெரிய வந்தது.
மேலும் சரஸ்வதியின் உடலை காரில் எடுத்து சென்று திருவள்ளூர், வெள்ளவேடு, தாத்ரீஸ்வரர் கோயில் அருகே உள்ள ஏரி ஒன்றினை வீசியதாகவும் தெரிவித்தார். போலீசார் சரஸ்வதியின் உடலை கண்டறிந்து அருகில் இருக்கும் செங்கல்பட்டு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
பின்னர் போலீசார் செங்கல்பட்டு நீதி மன்றத்தில் தீபன் மீது வழக்கு பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர். தலைமறைவாக இருக்கும் வினோத்குமாரை தேடுவதில் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.