கரூர் சம்பவம் அரசியலாக மாறுகிறதா? - கமல்ஹாசன் எம்.பி. கொடுத்த ரியாக்ஷன்

கரூர் சம்பவம் தொடர்பான தினமும் பேச வேண்டாம்.பேசிக்கொண்டே இருந்தால் சோகம் போய்விடாது.
கரூர் சம்பவம் அரசியலாக மாறுகிறதா? - கமல்ஹாசன் எம்.பி. கொடுத்த ரியாக்ஷன்
Published on

பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நலக்குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இதைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் நேற்று இரவு நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

இதையடுத்து இன்று காலை மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

கரூர் சம்பவம் தொடர்பான தினமும் பேச வேண்டாம். வழக்கு கோர்ட்டில் உள்ளது. சோகம் தான் இல்லை என்று சொல்லவில்லை. பேசிக்கொண்டே இருந்தால் சோகம் போய்விடாது. இனி நிகழாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்பது நம்முடைய கடமை.

கரூர் சம்பவம் அரசியலாக மாறுகிறதா? என்ற செய்தியாளரின் கேள்விக்கு, இப்போது நான் பேசியதில் கூட அரசியல் செய்யலாம். அரசியல் செய்யாமல் இருப்பது நாம் இருவரின் கடமை என்று கூறினார்.

இவ்வாறு அவர் கூறினார்.

X

Maalai Malar
www.maalaimalar.com