என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

சமத்துவம் நிறைந்த சமூகத்தை உருவாக்க பாடு படுவதே அம்பேத்கருக்கு நாம் செலுத்தும் மரியாதை- விஜய் வசந்த்
- சமூக நீதிக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளை நினைத்துப் பார்த்து அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.
- பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை வழங்கியுள்ளார்.
கன்னியாகுமரி தொகுதி எம்.பி விஜய் வசந்த், இன்று அம்பேத்கரின் நினைவு நாளையொட்டி சமூக வலைதளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில், "இந்திய அரசியலமைப்பின் பிரதான சிற்பி அண்ணல் பி.ஆர் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளில் சமூக நீதிக்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளை நினைத்துப் பார்த்து அவருக்கு அஞ்சலி செலுத்துவோம்.
சமத்துவம் நிறைந்த சமூகத்தை உருவாக்க அவர் கண்ட கனவினை நிறைவேற்ற பாடு படுவதே அவருக்கு நாம் செலுத்தும் மரியாதை" என்றார்.
இதைதொடர்ந்து, பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை வழங்கியுள்ளார். இதுகுறித்து கூறிய அவர், "
கங்கை இங்கு வரவேண்டும் குமரி கடலை தொட வேண்டும் என்பதற்கேற்ப கங்கை நதியை குமரி கடலில் கொண்டு சேர்க்க மத்திய அரசு திட்டம் ஒன்றினை கொண்டு வர வேண்டும் என்பது குறித்து பாராளுமன்றத்தில் விவாதிக்க ஒத்திவைப்பு தீர்மானம் ஒன்றினை வழங்கி உள்ளேன்.
இந்தத் திட்டம் விவசாயத்திற்கு பெரிதும் உதவும். மேலும் வெள்ளப்பெருக்கினால் ஏற்படும் அழிவுகளை தடுக்கவும் இது வழிவகை செய்யும். நீர்வழிப் போக்குவரத்து மூலம் பெரும் லாபத்தினையும் ஈட்டி தரும். எல்லாவற்றுக்கும் மேலாக இமயமலை குமரிக்கடலை தொடும்" என்றார்.






