சுற்றுலா பயணிகள் வருகை குறைந்ததால் வெறிச்சோடிய கன்னியாகுமரி கடற்கரை

கோவில்களில் பக்தர்களின் கூட்டம் குறைவாகவே காணப்படுகிறது. கன்னியாகுமரியில் இருந்து வட்டக்கோட்டைக்கு உல்லாச படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்துவிட்டது.
சங்கிலித்துறை கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்.
சங்கிலித்துறை கடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்.
Published on

முக்கடலும் சங்கமிக்கும் திரிவேணி சங்கமம் சங்கிலித்துறைகடற்கரை பகுதி சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடி கிடப்பதை படத்தில் காணலாம்.***கன்னியாகுமரி, ஜூன்.12-

இந்தியாவின் தென் கொடி முனையில் அமைந்து உள்ளது கன்னி யாகுமரி. இங்கு ஏப்ரல், மே மாதங்களில் கோடை விடுமுறையை குடும்பத் தோடு குதூகலத்துடன் கொண்டாட சுற்றுலாப் பயணிகள் படையெடுத்து வந்த வண்ணமாக இருப்பார்கள். இதனால் இந்த 2 மாத காலமும் இங்கு கோடை விடுமுறை சீசன் காலமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு கோடை விடுமுறை சீசன் நேற்றுடன் முடிவ டைந்தது. இதைத் தொடர்ந்து 2 மாதங்களுக்கு பிறகு இன்று பள்ளிகள் திறக்கப்பட்டு உள்ளது.

இதனால் கன்னியாகு மரிக்கு சுற்றுலா பயணி களின் வருகை அடியோடு குறைந்து விட்டது. இன்று காலையில் 1500 முதல் 2000 சுற்றுலாப் பயணிகள் மட்டுமே கன்னியாகுமரியில் கடல் நடுவில் அமைந்து உள்ள விவேகானந்தர் நினைவு மண்டபத்தை படகில் சென்று பார்த்து உள்ளனர்.

சுற்றுலாப் பயணிகளின் வருகை குறைந்ததால் விவேகா னந்தர் மண்டபத்துக்கு செல்லும் "கியூ" செட்டில் ஆட்கள் இல்லாமல் வெறிச் சோடி காணப்படுகிறது. கன்னியா குமரி பகவதி அம்மன் கோவில், விவேகானந்த புரம் கடற்கரையில் அமைந்துள்ள திருப்பதி வெங்கடாஜலபதிகோவில் ஆகிய கோவில்களில் பக்தர்களின் கூட்டம் குறை வாகவே காணப்படுகிறது. இதனால் கன்னியாகுமரி யில் இருந்து வட்டக்கோட் டைக்கு உல்லாச படகு சவாரி செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை யும் வெகுவாக குறைந்து விட்டது. கன்னியாகுமரியில் உள்ள முக்கடலும் சங்க மிக்கும் திரிவேணி சங்கமம், சங்கிலித்துறை கடற்க ரைப்பகுதி, காந்தி நினைவு மண்டபம், காமராஜர் மணிமண்டபம், மீன் காட்சிசாலை, கடற்கரையில் உள்ள பொழுதுபோக்கு பூங்காக்கள், அரசு பழத் தோட்டத்தில் உள்ள சுற்றுச் சூழல் பூங்கா, அரசு அருங்காட்சியகம், கலங்கரை விளக்கம், மியூசியம் வட்டக்கோட்டை பீச், சொத்தவிளை பீச், சன்செட் பாயிண்ட் கடற்கரை பகுதி போன்ற அனைத்து சுற்றுலா தலங்களும் சுற்றுலா பயணிகள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி கிடக்கின்றன. இதனால் கடைகளில் வியாபாரம் இன்றி வியாபாரிகள் தவிக்கிறார்கள்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com