என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    தி.மு.க.விடம் டார்ச் லைட்டை அடகு வைத்த கமல்ஹாசன்-  எச்.ராஜா
    X

    தி.மு.க.விடம் டார்ச் லைட்டை அடகு வைத்த கமல்ஹாசன்- எச்.ராஜா

    • தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது.
    • ஒரே நாளில் எட்டு கொலைகள் நடைபெறுகிறது.

    புதுக்கோட்டை:

    புதுக்கோட்டையில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    வருகிற 2026-ம் ஆண்டு தேர்தலில் அராஜக ஆட்சிக்கு முடிவு கட்டப்படும். இந்து விரோத சக்தியை வீட்டிற்கு அனுப்புவார்கள்.

    தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. ஒரே நாளில் எட்டு கொலைகள் நடைபெறுகிறது. தற்போது நடக்கும் ஆட்சியில் அனைத்திலும் ஊழல் நடைபெற்று வருகிறது.

    தமிழகத்திற்கு அமித்ஷா வந்தாலே மாற்றம் ஏற்படும் அதேபோல் தற்பொழுது அமித்ஷா வருகை மாற்றத்தை ஏற்படுத்தும். முருகன் மாநாட்டிற்கு அனுமதி அளிக்கவில்லை என்றால் நீதிமன்றத்தை நாடி அனுமதி பெற்று மாநாடு நடத்தப்படும்.

    கமலஹாசன் ஒரு எம்.பி., சீட்டுக்காக டார்ச் லைட்டை அடகு வைத்து விட்டார். பெங்களூர் சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் வருத்தத்துக்குரியது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×