Kamal Haasan | “தலைவன் இருக்கின்றான்” தி.மு.க.வுக்கு ஆதரவாக கமல்ஹாசன் எழுதி, பாடிய பாடல் வெளியீடு

தமிழ் மக்களின் மனதில் எழுந்திருக்கும் கோபமும் எழுச்சியும் என் மனதில் பாடலாய் எதிரொலித்தது.
Kamal Haasan | “தலைவன் இருக்கின்றான்” தி.மு.க.வுக்கு ஆதரவாக கமல்ஹாசன் எழுதி, பாடிய பாடல் வெளியீடு
Published on

தமிழ்நாட்டில் வருகிற 23-ஆம் தேதி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகள் இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில், நடிகரும், எம்.பி.யுமான கமல்ஹாசன் தி.மு.க.-வுக்கு ஆதரவாக பாடல் ஒன்றை எழுதி, பாடி வெளியிட்டுள்ளார்.

2026 தேர்தலுக்கான, திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு ஆதரவாக “தலைவன் இருக்கின்றான்” என்ற தலைப்பில் இந்த பாடல் உருவாகி இருக்கிறது. இப்பாடலின் பின்னணியில் உள்ள உணர்வை விளக்கிய கமல்ஹாசன், அறிவார்ந்த தமிழ் மக்களின் மனதில் எழுந்திருக்கும் கோபமும் எழுச்சியும் என் மனதில் பாடலாய் எதிரொலித்தது.

தமிழ்நாடு தொடர்ந்து வெற்றிப் பாதையில் முன்னேறி, வலிமை, கண்ணியம், தைரியம் மற்றும் பெருமையுடன் முன்னேற வேண்டும் என்ற நம்பிக்கையுடன் உருவாக்கப்பட்ட "தலைவன் இருக்கின்றான்" என்ற பாடலாக அந்த உணர்வு இப்போது வடிவம் பெற்றுள்ளது.

இப்பாடல், பின்வரும் வரிகளுடன் கூடிய ஒரு வலிமையான மற்றும் வீரியமிக்க செய்தியைத் தாங்கி நிற்கிறது: “இதுவே வெற்றிப் படை, ஒதுங்கிக்கொள், ஒதுங்கிக்கொள்.”

X

Maalai Malar
www.maalaimalar.com