வாள் கொண்டு வந்த தொண்டரால் கோபமடைந்த கமல்ஹாசன்

புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து கமல்ஹாசன் கலந்துரையாடினார். புத்தகங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கியும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது.
வாள் கொண்டு வந்த தொண்டரால் கோபமடைந்த கமல்ஹாசன்
Published on

சென்னை:

தி.மு.க. கூட்டணி சார்பில் மேல்சபை எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டுள்ள மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்திற்கு இன்று வருகை தந்தார். அப்போது அவருக்கு கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பட்டாசுகளை வெடித்து, மேள-தாளம் முழங்க உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கட்சியின் நிர்வாகக் குழு, செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள், மண்டல அமைப்பாளர்கள், மாவட்ட அமைப்பாளர்கள், நம்மவர் தொழிற்சங்கப் பேரவை நிர்வாகிகள், புதுச்சேரி மக்கள் நீதி மய்யம் நிர்வாகிகள் உள்ளிட்ட அனைத்து நிர்வாகிகளையும் சந்தித்து கமல்ஹாசன் கலந்துரையாடினார்.

பின்னர் அலுவலக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த மேடைக்கு வருகை தந்த கமல்ஹாசனுக்கு கட்சி நிர்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்தனர். பூங்கொத்துகளை கொடுத்தும், பொன்னாடைகளை அணிவித்தும் பலர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர். புத்தகங்கள் மற்றும் இனிப்புகளை வழங்கியும் கமல்ஹாசனுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. அனைவருடனும் கமல்ஹாசன் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டார்.

இந்த நிலையில், தொண்டர் ஒருவர் தான் கொண்டு வந்த வாளை கமலிடம் கொடுக்க முற்பட்டார். அதை வாங்க மறுத்து கமல்ஹாசன் கோபம் அடைந்தார்.

வாளை கீழே வைக்கச்சொல்லி விட்டு தொண்டரிடம் கைகுலுங்கி, புகைப்படம் எடுத்து அவரை அனுப்பி வைத்தார். இந்த சம்பவத்தால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிகழ்வில், மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர்கள் ஏ.ஜி.மவுரியா, தங்கவேல், பொதுச்செயலாளர் அருணாச்சலம், ஊடகப் பிரிவு செயலாளர் முரளி அப்பாஸ், இளைஞர் அணி செயலாளர் கவிஞர் சினேகன், தொழில் முனைவோர் அணி மாநில ஒருங்கிணைப்பாளர் ஜான்சன், தலைமை நிலையச் செயலாளர் செந்தில் ஆறுமுகம், வேளச்சேரி தொகுதி மாவட்ட துணைச் செயலாளர் சண்முக சுந்தரம், மகளிர் அணி செயலாளர் சினேகா மோகன்தாஸ், மீனவர் அணி செயலாளர் பிர தீப் குமார், விவசாய அணி செயலாளர் மயில்சாமி, தொழில் முனைவோர் அணி சென்னை மண்டல அமைப்பாளர் செல்வகுமார் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com