கள்ளழகர் திருவிழாவிற்காக வைகை அணையிலிருந்து 216 மி.கனஅடி திறப்பு

கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவிற்காக வைகை அணையிலிருந்து கடந்த 19ம் தேதி 1000 கனஅடி தண்ணீர்திறக்கப்பட்டது. முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.30 அடியாக உள்ளது.
கள்ளழகர் திருவிழாவிற்காக வைகை அணையிலிருந்து 216 மி.கனஅடி திறப்பு
Published on

கூடலூர்:

மதுரையில் பிரசித்தி பெற்ற கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் விழாவிற்காக வைகை அணையிலிருந்து கடந்த 19ம் தேதி 1000 கனஅடி தண்ணீர்திறக்கப்பட்டது. தொடர்ந்து 4 நாட்கள் தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் பின்னர் இது படிப்படியாக குறைக்கப்பட்டு முற்றிலும் நிறுத்தப்பட்டது.

கடந்த 4 நாட்களில் மட்டும் மதுரை கள்ளழகர் திருவிழாவிற்காக வைகை அணையிலிருந்து 216 மி.கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதாக பொதுப்பணி துறையினர் தெரிவித்துள்ளனர். இதனால் அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 57.64 அடியாக உள்ளது. நீர் இருப்பு 3166 மி.கனஅடியாக உள்ளது.

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 115.30 அடியாக உள்ளது. வரத்து 83 கனஅடியாகவும், திறப்பு 105 கனஅடியாகவும் உள்ளது. நீர் இருப்பு 1751 மி.கனஅடியாக உள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com