பத்திரிக்கையாளர்களின் குழந்தைகள் உதவித்தொகை இரு மடங்கு உயர்வு

தேர்தலுக்கான 164 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை திமுக ஏற்கனவே வெளியிட்டுள்ளது.
பத்திரிக்கையாளர்களின் குழந்தைகள் உதவித்தொகை இரு மடங்கு உயர்வு
Published on

234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்.23ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மே.4ஆம் தேதி வெளியாகிறது.

தேர்தலுக்கான 164 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை திமுக ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையை வெளியிட்டார்.

இதில், பத்திரிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

1. பத்திரிக்கையாளர்கள் பணிக்காலத்தில் கடுமையான நோயினால் பாதிக்கப்பட்டால் அவர்களின் மருத்துவச் சிகிச்சைக்காக ரூ.3.5 இலட்சமாக உயர்த்தி வழங்கப்படும். வழங்கப்படும் உதவித்தொகை

கல்விக்காக வழங்கப்படும் பல்வேறு

2. பத்திரிக்கையாளர்களின் குழந்தைகள் உதவித்தொகைகள் அனைத்தும் இரு மடங்காக உயர்த்தப்படும்.

3. அரசு வாடகைக் குடியிருப்புகளில் பத்திரிக்கையாளர்களுக்கான 3 விழுக்காடு இடஒதுக்கீடு உறுதி செய்யப்படும்.

4. அனைத்துப் பத்திரிக்கையாளர்களுக்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பிடு அட்டை வழங்கப்படும்.

5. தமிழ்நாடு அரசு பத்திரிக்கையாளர்களுக்குச் செயல்படுத்தி வரும் ஓய்வூதியம் மருத்துவ உதவி போன்ற திட்டங்கள் காட்சி ஊடகத்தில் பணியாற்றும் பத்திரிக்கையாளர்களுக்கும் விரிவுப்படுத்தப்படும்.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com