வரத்து அதிகரிப்பு- மல்லிகை பூ விலை கிலோ 280 ரூபாயாக சரிவு

மல்லிகை பூக்கள் வரத்து அதிகரித்துள்ளதால் அதிக அளவில் மல்லிகைப்பூக்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.
வரத்து அதிகரிப்பு- மல்லிகை பூ விலை கிலோ 280 ரூபாயாக சரிவு
Published on

சேலம் வ.உ.சி. மார்க்கெட்டிற்கு சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி உள்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் ஆந்திரா, கர்நாடகா உள்பட வெளிமாநிலங்களில் இருந்தும் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இந்த பூக்களை சேலம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அதிக அளவில் வாங்கி செல்கிறார்கள். குறிப்பாக மல்லிகை பூக்கள் வரத்து அதிகரித்துள்ளதால் அதிக அளவில் மல்லிகைப்பூக்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளது.

அதன் தொடர்ச்சியாக கடந்த மாதம் ஆயிரம் ரூபாய்க்கு மேல் விற்பனையான மல்லிகைப்பூ விலை படிப்படியாக சரிந்தது. பூக்கள் வரத்து தற்போது மேலும் அதிகரித்துள்ளதால் அதன் விலை கணிசமாக சரிந்துள்ளது. அதன்படி ஒரு கிலோ மல்லிகை பூ நேற்று 320 ரூபாய்க்கு விற்ற நிலையில் இன்று காலை 280 ரூபாயாக சரிந்தது.

இதே போல முல்லை பூ ஒரு கிலோ ரூ.120, காக்காட்டான் 160, கலர் காட்டான் 80, மலைக்காட்டான் 160, அரளி 60, நந்தியாவட்டம 160 ரூபாய்க்கும் விற்பனையானது. பூக்கள் விலை குறைந்ததால் வியாபாரிகள் மற்றும் பொது மக்கள் அதிக அளவில் வாங்கி சென்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com