தவெக அமைச்சரவையில் இடம்பெறும் ஐ.யூ.எம்.எல்!

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு அமைச்சர் பதவி கொடுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தவெக அமைச்சரவையில் இடம்பெறும் ஐ.யூ.எம்.எல்!
Published on

தமிழ்நாட்டில் தமிழக வெற்றிக் கழக அரசுக்கு ஆதரவளித்த காங்கிரசுக்கு அமைச்சரவையில் 2 இடங்கள் ஒதுக்கப்பட்டு, அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் வழக்கறிஞர் ராஜேஷ்குமார் மற்றும் பி. விஸ்வநாதன் ஆகியோர் அமைச்சர்களாகப் பொறுப்பேற்க உள்ளனர்.

இதனிடையே தவெக, தங்களுக்கு ஆதரவளித்த பிற கட்சிகளையும் அமைச்சரவையில் சேர்க்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. இதனடிப்படையில் இடதுசாரி கட்சிகள், விசிக, ஐயூஎம்எல் கட்சிகளுக்கு அமைச்சரவையில் இடம்பெற அழைப்பு விடுத்தது. இதில் இடதுசாரி கட்சிகளான சிபிஎம், சிபிஐ அமைச்சரவையில் இடம்பெற மறுப்பு தெரிவித்த நிலையில், விசிக ஆலோசனை நடத்திவிட்டு பிறகு அறிவிப்பதாக தெரிவித்தது.

இந்நிலையில் ஐயூஎம்எல் அமைச்சர் பதவியை ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு எம்எல்ஏக்களில் யார் அமைச்சர் என்பதை நாளை அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் அறிவிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏ.எம். ஷாஜஹான் பாபநாசத்திலும், சையத் ஃபாரூக் பாஷா வாணியம்பாடியிலும் வெற்றிப் பெற்றிருந்தனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com