கோவில்பட்டி ஸ்கேன் மருத்துவமனையில் 3-வது நாளாக தொடரும் சோதனை

தமிழகம் முழுவதும் ஸ்கேன் மையங்கள், உரிமையாளர் வீடு, மருத்துவமனை வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.மருத்துவமனை, ஸ்கேன் மையம் மற்றும் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக கோவிந்தராஜன் மனைவி மருத்துவர் கோமதி, ஊழியர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவில்பட்டி ஸ்கேன் மருத்துவமனையில் 3-வது நாளாக தொடரும் சோதனை
Published on

கோவில்பட்டி:

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்தவர் கோவிந்தராஜன்.

இவர் சென்னையை தலைமை இடமாக கொண்டு தமிழகம் மட்டுமின்றி, நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ஆர்த்தி ஸ்கேன், லேப்ஸ் என்ற நிறுவனத்தினை நடத்தி வருகிறார்.

இந்நிலையில் தமிழகம் முழுவதும் ஆர்த்திஸ்கேன் மையங்கள், உரிமையாளர் வீடு, மருத்துவமனை என கடந்த 7-ந் தேதி 25 இடங்களுக்கு மேல் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர்.

கோவில்பட்டியிலும் அண்ணா பஸ் நிலையம் அருகே உள்ள ஆர்த்தி மருத்துவமனை, ஆர்த்தி ஸ்கேன், உரிமையாளர் வீடு மற்றும் ஆர்த்தி திருமண மண்டபம் என உள்ளிட்ட இடங்களில் 5 குழுக்களாக வருமான வரித்துறையினர் பிரிந்து கடந்த 2 நாட்களாக தொடர்ந்து சோதனை நடத்தி வந்தனர்.

3-வது நாளாக இன்றும் சோதனை நீடித்து வருகிறது. மருத்துவமனை, ஸ்கேன் மையம் மற்றும் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பாக கோவிந்தராஜன் மனைவி மருத்துவர் கோமதி, மருத்துவமனை ஊழியர்களிடம் அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com