கோலாகலமாக தொடங்கியது ஈஷா மகா சிவராத்திரி விழா- ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு

ஜனாதிபதியை சத்குரு வரவேற்று, ஈஷா யோகா மையத்தை காரில் சுற்றி காட்டினார்.ஆதியோகி முன்பு கோலாகலமாக மஹா சிவராத்திரி விழா தொடங்கியது.
கோலாகலமாக தொடங்கியது ஈஷா மகா சிவராத்திரி விழா- ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்பு
Published on

கோவை:

ஜனாதிபதி திரவுபதி முர்மு பதவியேற்ற பிறகு முதல் முறையாக இன்று தமிழகம் வந்தார். புதுடெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை மதுரைக்கு வந்த அவர், மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். அவருக்கு மீனாட்சி அம்மன் கோவில் சார்பில் பூரண கும்ப மரியாதையுடன் தக்கார் கருமுத்து கண்ணன் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். சிவராத்திரியான இன்று மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் சன்னதிகள் உள்ளிட்ட அனைத்து சன்னதிகளுக்கும் ஜனாதிபதி சென்று தரிசனம் செய்தார்.

பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் மாலையில் கோவைக்கு வந்தார். மகா சிவராத்திரியை முன்னிட்டு ஈஷா யோகா மையத்திற்கு ஜனாதிபதி திரபுவதி முர்மு வந்தார். அவரை சத்குரு வரவேற்று, ஈஷா யோகா மையத்தை காரில் சுற்றி காட்டினார். ஜனாதிபதி முர்மு, தீர்த்த குளத்தை பார்வையிட்ட பின், தியான பீடத்தில் வழிபாடு செய்தார்.

பின்னர் ஆதியோகி முன்பு கோலாகலமாக மஹா சிவராத்திரி விழா தொடங்கியது. விழாவில் ஜனாதிபதி திரவுபதி மும்மு பங்கேற்றார். விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி, அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோரும் பங்கேற்றனர். 

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com