இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்- காதலியை தேடி வந்த மதுரை வாலிபருக்கு தர்ம அடி

திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மாணவி காதலனுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். மாணவியின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் வாலிபர்களை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்து ஒரு வீட்டுக்குள் அடைத்து வைத்தனர்.
இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்- காதலியை தேடி வந்த மதுரை வாலிபருக்கு தர்ம அடி
Published on

வேடசந்தூர்:

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள ஒரு கிராத்தை சேர்ந்த 18 வயது மாணவிக்கு மதுரை ஜெய்ஹிந்த்புரத்தை சேர்ந்த சேர்ந்த ஆதித்யாவுடன் இன்ஸ்டாகிராமில் பழக்கம் ஏற்பட்டது.

நாளடைவில் இது காதலாக மாறி இருவரும் பேசி வந்துள்ளனர். திடீரென கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மாணவி காதலனுடன் பேசுவதை தவிர்த்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஆதித்யா மாணவியை மிரட்டி என்னை காதலிக்காவிட்டால் 2 பேரும் எடுத்துக்கொாண்ட புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவேன் என மிரட்டினர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி தனது சகோதரரிடம் கூறி உள்ளார். அவர் பேசியும் கேட்காத ஆதித்யா தனது நண்பர்களுடன் 2 பைக்கில் மாணவியின் கிராமத்திற்கு வந்துள்ளார். அங்கு அவரது வீட்டை விசாரித்துக் கொண்டிருந்தபோது மாணவியின் அண்ணன் மற்றும் அவரது நண்பர்கள் வாலிபர்களை சுற்றி வளைத்து தர்ம அடி கொடுத்து ஒரு வீட்டுக்குள் அடைத்து வைத்தனர்.

இதுகுறித்து வேடசந்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் தலைமையிலான போலீசார் விரைந்து வந்து வாலிபர்களை மீட்டு வேடசந்தூர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரித்தனர். அவர்களிடம் இருந்து செல்போன் மற்றும் பைக்கை பறிமுதல் செய்து பெற்றோரை அழைத்துவரும்படி கூறினர்.

பெற்றோர் வந்ததும் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண போலீசார் முடிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com