சமையல் கியாஸ் தட்டுப்பாடு.. பீதியில் வாடிக்கையாளர்கள்- இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்

இந்தியாவின் 80 சதவீதம் கச்சா எண்ணெய் கொண்டு செல்ல பயன்படும் முக்கிய போக்குவரத்து தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் ராணுவம் மூடியது.
சமையல் கியாஸ் தட்டுப்பாடு.. பீதியில் வாடிக்கையாளர்கள்- இந்தியன் ஆயில் நிறுவனம் விளக்கம்
Published on

மேற்கு ஆசியாவில் ஈரான் உடனான இஸ்ரேல் ராணுவத்தின் போரில் அமெரிக்கா தலையிட்டு பயங்கர தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலடியாக வளைகுடா நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள், கச்சா எண்ணெய் கிணறுகள் ஆகியவற்றை குறிவைத்து ஈரான் ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

மேலும் இந்தியாவின் 80 சதவீதம் கச்சா எண்ணெய் கொண்டு செல்ல பயன்படும் முக்கிய போக்குவரத்து தடமான ஹார்முஸ் நீரிணையை ஈரான் ராணுவம் மூடியது. இதனால் போர்ப் பதற்றம் அதிகரித்து இந்தியா மட்டுமின்றி உலகளவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதற்கிடையே நாட்டின் எரிபொருள் மற்றும் கியாஸ் வினியோகம் சீராக உள்ளதாக முன்னணி பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான இந்தியன் ஆயில் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறிந்து அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "உலகளாவிய எரிசக்தி சந்தைகளில் நிலவும் அரசியல் பதற்றங்கள் இருந்தாலும், இந்தியாவின் சமையல் கியாஸ் வினியோகம் நிலையாகவும் போதுமானதாகவும் உள்ளது. இது தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. உள்நாட்டு வினியோகம் உயர்ந்த முன்னுரிமையுடன் நடைபெறுகிறது. தற்போது தினமும் 28 லட்சம் கியாஸ் சிலிண்டர்கள் வினியோகிக்கப்படுகின்றன. இது தற்போதைய பதற்றங்களுக்கு முன்பிருந்த சாதாரண அளவுடன் ஒத்ததாகும். வீடுகளுக்கு தடையற்ற வினியோகம் நடைபெற்று வருகிறது" எனப்பட்டுள்ளது.

சமையல் கியாஸ் வினியோகஸ்தர்களிடையே நடைபெறும் கள்ளச்சந்தை மற்றும் குவிப்பு தடுப்பதற்காக பல்வேறு துறைகளை சேர்ந்த குழுக்கள் திடீர் சோதனைகள் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை நாடு முழுவதும் 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சோதனைகள் நடத்தப்பட்டு 141 டீலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும். 855 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 48 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நாட்டில் கியாஸ் தட்டுப்பாடு இல்லை எனவும் வாடிக்கையாளர்கள் பீதியால் முன்பதிவு செய்யவோ, சிலிண்டர்களை சேமித்து வைக்கவோ வேண்டாம். வினியோக நிலையங்களில் வரிசையில் நிற்க தேவையில்லை. வதந்திகளை நம்பாமல், அதிகாரப்பூர்வ தகவல்களை மட்டுமே நம்புங்கள் என்று நிறுவனம் கேட்டுக்கொண்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com