

20 வயதிற்கு உட்பட்டோருக்கான ஆசிய சாம்பியன்ஷிப்ஸ் தடகள போட்டி ஹாங் காங்கில் நடைபெற்று வருகிறது. இன்றைய 3-வது நாள் போட்டியில் இந்தியாவுக்கு 3 தங்க பதக்கம் கிடைத்தது.
3000 மீ. ஸ்டீபிள்சேஸ் போட்டியில் நிகில் சந்திரசேகர், உயரம் தாண்டுதலில் பசந்த், நீளம் தாண்டுதலில் ஷானவாஸ் கான் ஆகியோர் தங்கம் வென்றனர்.
இந்த மொத்தம் 7 பதக்கம் வென்றுள்ளது. இதில் 4 தங்க பதக்கமாகும்.
நிகில் சந்திரசேகர் ஸ்டீபிள்சேஸில் 9:25.44 நேரத்தில் பந்தைய இடத்தை கடந்து முதலிடம் பெற்றார். ஷானவாஸ் கான் நீளம் தாண்டுதலில் 7.84 மீ. தூரம் தாண்டி தங்கம் வென்றார். அர்ஜுனன் ராமன் சந்திரசேகரன் 7.66 மீ. தாண்டி வெள்ளி வென்றார்.
உயரம் தாண்டுதலில் பசந்த் 2.20 மீ. தாண்டி தங்கம் வென்றார். ஆர்த்தி வெண்கல பதக்கம் வென்றார். இவர் பெண்களுக்கான 200 மீ. ஓட்டத்தில் 24.12 விநாடிகளில் கடந்து 3-வது இடம் பிடித்தார்.
சீனா 10 தங்க பதக்கத்துடன் முதல் இடத்தில் உள்ளார்.