"இல்லத்தரசி" திட்டம்..! மகளிருக்கு ரூ.8,000 மதிப்பிலான கூப்பன்- தி.மு.க தேர்தல் அறிக்கை

இல்லத்தரசி என்கிற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
"இல்லத்தரசி" திட்டம்..! மகளிருக்கு ரூ.8,000 மதிப்பிலான கூப்பன்- தி.மு.க தேர்தல் அறிக்கை
Published on: 

234 தொகுதிகளை கொண்ட தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான தேர்தல் ஏப்.23ஆம் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் மே.4ஆம் தேதி வெளியாகிறது.

தேர்தலுக்கான 164 பேர் கொண்ட வேட்பாளர் பட்டியலை திமுக ஏற்கனவே வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இன்று திமுகவின் தேர்தல் அறிக்கை வெளியாகி உள்ளது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் கட்சியின் தலைவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிக்கையை வெளியிட்டார்.

இதில், இல்லத்தரசி என்கிற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இல்லத்தரசி என்ற புதிய திட்டத்தின் மூலம், மகளிருக்கு ரூ.8,000 மதிப்பிலான கூப்பன் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

ரூ.8 ஆயிரம் கூப்பன் மூலம் டிவி, பிரிட்ஜ், வாஷிங் மெஷின், மைக்ரோவேவ் ஓவன், மிக்சி என வீட்டு உபயோக பொருட்கள் வாங்கலாம்.

ஏற்கனவே இருக்கும் பழைய பொருட்களை கடைகளில் மாற்றிக் கொள்ளலாம்.

வருமான வரி செலுத்தாத குடும்பங்களைச் சேர்ந்த இல்லத்தரசிகள் இந்த கூப்பன் மூலம் வீட்டு உபயோக பொருட்கள் வாங்கிக்கொள்ளலாம் என்று திமுக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com