TN Election 2026 | நாட்டிலேயே மிகவும் பொறுப்பற்ற மாநில அரசு என்றால் அது தமிழ்நாடு அரசுதான்: பியூஷ் கோயல் கடும் குற்றச்சாட்டு

அரசின் கஜானாவை முதல்வரின் குடும்பம் ஏ.டி.எம். ஆக பயன்படுத்தி வருகிறது மு.க. ஸ்டாலின் மீது பியூஷ் கோயல் கடும் குற்றச்சாட்டை முன்வைத்தார்
TN Election 2026 | நாட்டிலேயே மிகவும் பொறுப்பற்ற மாநில அரசு என்றால் அது தமிழ்நாடு அரசுதான்: பியூஷ் கோயல் கடும் குற்றச்சாட்டு
Published on

மத்திய அமைச்சரும், தமிழக சட்டசபை தேர்தலுக்கான பா.ஜ.க. கட்சி மேலிட பொறுப்பாளருமான பியூஷ் கோயல் இன்று சென்னையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

* தமிழ்நாட்டின் கடன் ரூ. 10 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. கடன் சுமை அதிகரித்துக் கொண்டே செல்வதால் வெள்ளை அறிக்கை. பணம் எங்கே போச்சு முதல்வரே? நாங்கள் கேட்கும் கேள்விகளுக்கு முதல்வரிடம் பதில் இல்லை. பொய்யான பரப்புரைகளை முதல்வர் மேற்கொண்டு வருகிறார்.

* தமிழக அரசின் வருவாய் அதிகரிக்க GST-யும் ஒரு காரணம்.

* நாட்டிலேயே மிகவும் பொறுப்பற்ற மாநில அரசு என்றால் அது தமிழ்நாடு மாநில அரசுதான்.

* அரசின் கஜானாவை முதல்வரின் குடும்பம் ஏ.டி.எம். ஆக பயன்படுத்தி வருகிறது.

* அரசு ஊழியர்களின் பணப்பலன்களை முதல்வர் குடும்பம் அபகரித்துள்ளது. அரசு ஊழியர்கள் பணப்பலன் மட்டுமின்றி மது விற்பனை, அரசு ஒப்பந்த பணிகள் என அனைத்திரும் கமிஷன் அடிக்கிறது திமுக.

* ஊழல் செய்யும் திமுக அரசு எந்த விதத்திலும் மீண்டும் ஆட்சிக்கு வந்து விடக்கூடாது.

* 12 லட்சம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது என்கிறது திமுக அரசு. அந்த முதலீடுகள் எங்கே?

இவ்வாறு பியூஷ் கோயல் பேசினார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com