‘பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடில்லை’ - முதலமைச்சர் விஜய்!

தங்களுக்கு பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடில்லை என்னும் நிலைப்பாட்டை முதலமைச்சர் விஜய் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
‘பெரியாரின் கடவுள் மறுப்புக் கொள்கையில் உடன்பாடில்லை’ - முதலமைச்சர் விஜய்!
Published on: 

தமிழ்நாடு சட்டசபைக் கூட்டத்தொடரில் இன்று ஆளுநர் உரைமீதான நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், தவெகவின் அரசியல் பயணம் குறித்துப் பேசினார். அப்போது,

“தமிழக வெற்றிக் கழகத்தை 2024ஆம் ஆண்டு தொடங்கினோம். ஆரம்பித்த உடனேயே சிஏஏவை எதிர்த்து அறிக்கை விட்டோம். அதனைத்தொடர்ந்து விக்கிரவாண்டியில் தவெக முதல் மாநாட்டை நடத்தினோம். தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராசர், அண்ணல் அம்பேத்கர், வீரமங்கை வேலுநாச்சியர், மக்கள் சேவகர் அஞ்சலையம்மாள் என ஐந்து கொள்கைத் தலைவர்களை அறிவித்தோம்.

இந்தியாவில் இரண்டு பெண்களை கொள்கைத் தலைவர்களாக கொண்ட ஒரேக் கட்சி தவெக. பெரியார் சொன்னவாறே அவர்க் கூறியதில், எங்களுக்கு ஏற்புடையதே மட்டுமே எடுத்துக்கொண்டோம்.

அவரது கடவுள் மறுப்புக் கொள்கைகளில் எங்களுக்கு உடன்பாடில்லை என்பதே வெளிப்படையாக அறிவித்தோம். எங்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு என்றும் அறிவித்தோம். யாருடைய நம்பிக்கைக்கும் நாங்கள் எதிரானவர்கள் இல்லை என்பதை தெளிவாக அறிவித்தோம்.

பெண் கல்வி, பெண் சீர்திருத்தம் என பெரியாரின் பல கொள்கைகளை ஏற்றுக்கொண்டோம்.” என தெரிவித்தார்.

X

Maalai Malar
www.maalaimalar.com