

திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் சென்னை மத்திய குற்றப்பிரிவில் விசாரணைக்காக இன்று காலை ஆஜரானார்.
அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்த வழக்கில் விசாரணைக்கு ஆஜரான திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கர் பேட்டி அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:-
போக்குவரத்து துறையில் வேலை வாங்கித்தருவதாக பணம் வாங்கவில்லை. விசாரணைக்கு அழைத்ததால் வந்தேன்.
போக்குவரத்துக் கழகத்தில் வேலை வாங்கித் தருவதாக கைது செய்யப்பட்ட இளஞ்செழியனுக்கும் எனக்கும் தொடர்பில்லை. கைது செய்யப்பட்ட நபருடன் நான் தொலைபேசியில் பேசிய உரையாடல்கள் இருப்பதாக கூறியுள்ளனர்.
தொலைபேசி உரையாடலில் உள்ள குரலையும் எனது குரலையும் ஒப்பிடும் சோதனைக்கு நான் தயார்.
அமைச்சராக இருந்தபோது என்னை சந்திக்க 200 முதல் 300 நபர்கள் வருவார்கள், அவர்களுடன் தொடர்புபடுத்தி பேசுவது சரியா?
இவ்வாறு அவர் கூறினார்.