ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு
Published on

தருமபுரி:

கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

இந்த நிலையில் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நேற்று 8 ஆயிரம் கன அடியாக வந்தது.

காவிரி நீர்ப்பிடிப்பு தமிழக எல்லை பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், ராசி மணல், ஊட்டமலை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக இன்று காலை 8 மணி நிலவரப்படி 9,500 கன அடியாக தண்ணீர் வந்தது. 9 மணி நிலவரப்படி நீர்வரத்து 14 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இதனால் மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

சுற்றுலா பயணிகள் பரிசல் பயணம் செய்து காவிரி ஆற்றின் அழகை ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவியில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர்.

அவர்கள் மீன் சாப்பாடு வாங்கி கொண்டு பூங்காவில் அமர்ந்து சாப்பிட்டு மகிழ்ந்தனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com