ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்தது.அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
Published on

ஒகேனக்கல்:

கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்தது. மேலும் தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, நாட்றாம் பாளையம், ராசி மணல், பிலி குண்டுலு உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து உள்ளது.

இதனால் தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு நேற்று நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழை குறைந்தது. இன்று காலை 8 மணி நிலவரப்படி 5 ஆயிரம் கன அடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினி பால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.

பின்னர் அவர்கள் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.

காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com