ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8,500 கனஅடியாக சரிவு

கடந்த 2 நாட்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாகவே தொடர்ந்து நீடித்தது.ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8,500 கனஅடியாக சரிவு
Published on

ஒகேனக்கல்:

கர்நாடக மாநில நீர்பிடிப்பு பகுதியில் பெய்த மழையால் கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் இந்த இரு அணைகளில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன்பு வினாடிக்கு 17 ஆயிரத்து 960 கனஅடி வீதம் தண்ணீர் திறந்து விடப்பட்டது.

மேலும் காவிரி ஆற்றில் திறந்து விடப்படும் நீரின் அளவு அதிகரிப்பதும், குறைவதுமாக இருந்தது.

இதன் காரணமாக கடந்த 2 நாட்களாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரம் கனஅடியாகவே தொடர்ந்து நீடித்தது.

இந்த நிலையில் தற்போது கர்நாடக அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு குறைக்கப்பட்டது.

இதனால் ஒகேனக்கல்லுக்கு நேற்று மாலை 11 ஆயிரம் கனஅடியாக வந்த நீர்வரத்து இன்று காலை 6 மணி நிலவரப்படி 8,500 கனஅடியாக தண்ணீர் குறைந்து வந்தது.

இருப்பினும் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இந்த நீர்வரத்தை தமிழக-கர்நாடக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வள ஆணைய அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் விதிக்கப்பட்ட தடையானது தொடர்ந்து 9-வது நாளாக நீடித்தது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com