இன்று முதல் 3 நாட்களுக்கு திம்பம் மலைப்பாதையில் கனரக போக்குவரத்துக்கு தடை

மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றிய கனரக வாகனங்கள் அடிக்கடி பழுதாவதால் வாகன போக்குவரத்து தடைபடுகிறது.
இன்று முதல் 3 நாட்களுக்கு திம்பம் மலைப்பாதையில் கனரக போக்குவரத்துக்கு தடை
Published on: 

ஈரோடு:

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. இதில் ஈரோடு மாவட்டம் பவானிசாகர் தொகுதிக்குட்பட்ட மலை கிராமங்களில் உள்ள தாளவாடி ஆசனூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கிராமங்களுக்கு தேர்தல் தளவாடங்களை தேர்தல் அலுவலர்கள், போலீசார் கோவை -மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் பண்ணாரி - திம்பம் மலைப்பாதை வழியாக எடுத்து சென்று வர வேண்டி உள்ளது.

மலைப்பாதையில் அதிக பாரம் ஏற்றிய கனரக வாகனங்கள் அடிக்கடி பழுதாவதால் வாகன போக்குவரத்து தடைபடுகிறது. இந்த சூழலில் தேர்தல் தளவாடங்களை தங்கு தடையின்றி எடுத்துச் செல்லும் பொருட்டு சாலையில் கனரக வாகனங்கள் உள் நுழைவு மற்றும் வெளியேறும் போக்குவரத்தும் இன்று முதல் வருகிற 24-ஆம் தேதி வரை அதாவது மூன்று நாட்களுக்கு தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை கலெக்டர் கந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com