தமிழகத்தில் 3 நாட்களுக்கு அதி கனமழை- இந்திய வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வரும் 23, 24, 25 ஆகிய 3 நாட்கள் அதி கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் 23, 24, 25 ஆகிய தேதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் 3 நாட்களுக்கு அதி கனமழை- இந்திய வானிலை ஆய்வு மையம்
Published on

சென்னை:

இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் வரும் 23, 24, 25 ஆகிய 3 நாட்கள் அதி கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 7 நாட்களுக்கு பரவலாக மிதமான மழை பெய்யும். தமிழகத்தில் நாளை மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதால் ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் நாளை கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

கேரளா மற்றும் தெற்கு உள் கர்நாடகாவில் 23, 24, 25 ஆகிய தேதிகளில் அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இன்றைய தினம் கேரளா மற்றும் கடலோர கர்நாடகாவில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com