கனமழை எதிரொலி- 3 நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை

பயணிகளின் வசதிக்காக கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என அறிவிப்பு.காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும்.
கனமழை எதிரொலி- 3 நாட்களுக்கு கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை
Published on

கனமழை காரணமாக பயணிகளின் வசதிக்காக கூடுதல் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் கூடுதல் ரெயில் சேவை இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.

அதன்படி, காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரெயில் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், காலை 8 மணி முதல் 11 மணி வரை பச்சை வழித்தடத்தில் 5 நிமிட இடைவெளியிலும், நீல வழித்தடத்தில் 6 நிமிட இடைவெளியிலும் ரெயில்கள் இயக்கப்படுகிறது.

வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரை 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரெயில் சேவை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com