ரிஷிகேஷ் கங்கை அருகே குடிப்பதை தடுத்த போலீஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்- வீடியோ

ரிஷிகேஷ் கங்கை ஆற்றங்கரையோரம் மது குடிப்பதை தட்டிக் கேட்டதால் பெண் ஒருவர் போலீஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
ரிஷிகேஷ் கங்கை அருகே குடிப்பதை தடுத்த போலீஸ் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பெண்- வீடியோ
Published on

இமயமலை அடிவாரத்தில் உத்தரகாண்ட் மாநிலம் ரிஷிகேஷியில் கங்கை ஆறு ஒடுகிறது. புனித ஸ்தலமாக இந்த இடம் இருப்பதால் மது அருந்தவும், அசைவ பொருட்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

ஆனால், அரியானாவில் இருந்து சுற்றுலா வந்த பெண் ஒருவர் தனது கணவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இதை அங்கு இருந்தவர்கள் மற்றும் போலீசார் தட்டிக்கேட்டு, குடிக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளனர்.

அப்போது அந்த பெண் போலீசாருடன் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார். அத்துடன் "நாங்கள் (சுற்றுலாப் பயணிகளே) உங்கள் வாழ்வாதாரத்தைத் தாங்கி நிற்கிறோம். நீங்கள் சம்பாதிக்கும் பணத்தையே நாங்கள் பருகிக் கொண்டிருக்கிறோம்" எனக் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் தனது கணவருடன் காரில் புறப்பட்டுச் சென்றார்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com