ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!

ஆசிரியர் தேர்வு வாரிய சிறப்பு முகாம்களை ஜூன்.22 முதல் 30 வரை அணுகலாம்
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு!
Published on

தமிழ்நாட்டில் வரும் ஜூலை 4 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதி தேர்வுக்கான நுழைவு சீட்டு வெளியிடப்பட்டுள்ளதாக தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

தேர்வர்கள் தங்களது பயனர் முகவரி ( User id) மற்றும் கடவுச் சொல் (Password) ஆகியவற்றை https://trb1.ucanapply.com/login என்ற இணையதள முகவரியில் உள்ளீடு செய்து தங்களுக்குரிய நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

நுழைவுச் சீட்டு பதிவிறக்கம் செய்வதிலோ அல்லது வேறு ஏதேனும் குறைபாடுகள் அல்லது சந்தேகங்கள் இருந்தால், ஆசிரியர் தேர்வு வாரிய சிறப்பு முகாம்களை ஜூன்.22 முதல் 30 வரை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையத்திற்குச் செல்லும்போது நுழைவுச்சீட்டை அச்சுப்பிரதியாக எடுத்துச் செல்வது கட்டாயமாகும். ஹால் டிக்கெட் இல்லாத தேர்வர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

பள்ளிகளில் தற்பொழுது பணியாற்றி வரும் ஆசிரியர்கள் தங்களின் பணியைத் தொடரவும் மற்றும் பதவி உயர்வு பெறவும் டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவது உச்ச நீதிமன்றத்தால் கட்டாயமாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com