கும்மிடிப்பூண்டி பாலியல் வன்கொடுமை: சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு

சிறுமி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கும்மிடிப்பூண்டி பாலியல் வன்கொடுமை: சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைப்பு
Published on

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த சிப்காட் தொழிற்பேட்டை பகுதியில் 300-க்கும் மேற்பட்ட தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இவற்றில் பெரும்பாலும் வடமாநில தொழிலாளர்களே அதிக அளவில் வேலை செய்து வருகின்றனர்.

சிப்காட் பகுதியொட்டிய புதுப்பேட்டை கிராமத்தில் பீகார், உத்தர பிரதேசம், ஒடிசா, ஜார்கண்ட் உள்ளிட்ட பல்வேறு வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்தோடும், தனியாகவும் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வருகின்றனர்.

நேற்று மாலை இந்த பகுதியில் வசித்த வடமாநில தம்பதியின் 3 வயது பெண் குழந்தை திடீரென மாயமானாள். இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மற்றும் அக்கம் பக்கத்தினர் சிறுமியை தேடி வந்தனர்.

அப்போது அப்பகுதியில் உள்ள முட்புதரில் மாயமான சிறுமி பலத்த ரத்த காயத்துடன் உயிருக்கு போராடிய நிலையில் கிடந்தாள். மேலும் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

இதனையடுத்து சிறுமியை மீட்டு சிகிச்சைக்காக கும்மிடிப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிறுமிக்கு தீவிர அளிக்கப்பட்டு வந்தது. ஆனால், சிறுமி இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்நிலையில், சிறுமியின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு முடிந்த நிலையில் குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அதே பகுதியில் தங்கி வேலைபார்த்து வந்த பீகாரைச் சேர்ந்த பிபின் மஞ்சி (வயது19) என்பவரை மடக்கி பிடித்த பொது மக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.

இதையடுத்து, போலீசார் பிபின் மஞ்சியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com