கும்மிடிப்பூண்டி அருகே விபத்து: வங்கி ஊழியர் பலி

விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த விஜய் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
கும்மிடிப்பூண்டி அருகே விபத்து: வங்கி ஊழியர் பலி
Published on

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த கோட்டக்கரை அண்ணா நகரைச்சேர்ந்தவர் விஜய் (வயது32). இவருக்கு திருமணமாகி 3 வருடங்கள் ஆன நிலையில், மனைவி மோகனா (29) தற்போது தான் 9 மாத கர்ப்பமாக உள்ளார்.

சென்னையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் விஜய் ஊழியராக வேலை செய்து வந்தார். கடந்த மாதம் 28-ஆம் தேதி, மோட்டார் சைக்கிளில் சென்னை நோக்கி வேலைக்கு சென்ற போது, கவரைப்பேட்டை அடுத்த வேற்காடு அருகே மோட்டார் சைக்கிளின் பின்னால் அதே திசையில் வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயம் அடைந்த விஜய் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து கவரைப்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com