மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட காவலாளிக்கு அடி - உதை: தோழிகள் ஒன்று சேர்ந்து தாக்கினார்கள்

போதை நபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
மாணவியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட காவலாளிக்கு அடி - உதை: தோழிகள் ஒன்று சேர்ந்து தாக்கினார்கள்
Published on

மேற்கு வங்கத்தை சேர்ந்த மாணவி சென்னை தரமணியில் உள்ள தனியார் கல்லூரியில் இதழியல் படித்து வருகிறார்.தரமணி கானகத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ளார்.

இவர் நேற்று முன்தினம் இரவு தனது தோழிகள் இருவருடன் அதே பகுதியில் உள்ள ஒரு ஓட்டலுக்கு சென்று சாப்பிட்டுவிட்டு மீண்டும் விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது மது போதையில் இருந்த ஒரு நபர் மாணவியின் உடலில் கை வைத்து சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார். இதையடுத்து 3 பேரும் சேர்ந்து போதை நபரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் கோட்டூர்புரம் போலீசில் ஒப்படைத்தனர்.

போலீஸ் விசாரணையில் அவரது பெயர் காசி என்பது தெரியவந்தது 58 வயதான அவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நெசல் கிராமத்தை சேர்ந்தவர் என்பதும், சென்னையில் தங்கி இருந்து 40 ஆண்டுகளாக கொத்தனார் வேலை செய்து வருவதும் தெரிய வந்தது.

அவர் மீது பெண்களுக்கு எதிரான வன்கொடுமை தடுப்பு சட்டம் உள்ளிட்ட 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் காசியை கைது செய்தனர். பின்னர் அவரை சைதாப்பேட்டை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com