மாப்பிள்ளை மதுகுடித்து விட்டு வந்ததால் திருமணத்தை நிறுத்திய மணப்பெண்

மாப்பிள்ளையின் கோலத்தை கண்ட தோழிகள் வீட்டுக்குள் இருந்த முஸ்கானுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக வெளியே வந்தார்.
திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
Published on

சத்தீஸ்கர் மாநிலம் ஜாஞ்ச்கிர்-சம்பா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முஸ்கான் பிரதான் (வயது22). இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சந்த்ராம் என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. கடந்த 23-ந்தேதி இவர்களுக்கு திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அன்று மணமகன் ஊர்வலமாக மணமகளின் வீட்டிற்கு வந்தடைந்தார்.

அப்போது குடிபோதையில் இருந்த மணமகன் காரிலிருந்து இறங்கியபோது சரியாக நிற்க கூட முடியவில்லை. போதையில் தள்ளாடி கொண்டிருந்த அவரை நண்பர்கள் கை தாங்கலாக அழைத்து வந்தனர். இதனை கண்டதும் மணப்பெண் வீட்டார் அதிர்ச்சியடைந்தனர்.

மாப்பிள்ளையின் கோலத்தை கண்ட தோழிகள் வீட்டுக்குள் இருந்த முஸ்கானுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் உடனடியாக வெளியே வந்தார். கழுத்தில் மாலை அணிந்தபடி போதையில் தள்ளாடி கொண்டிருந்த மணமகன் கன்னத்தில் அறைந்தார். மேலும் அவரைத் திருமணம் செய்ய மாட்டேன். உடனே திருமணத்தை நிறுத்துங்கள் என அவரது பெற்றோரிடம் கூறினார். அவர்களும் அவரது முடிவை ஏற்றனர்.

திருமணம் நிறுத்தப்பட்டதாக தெரிவித்தனர். அப்போது மாப்பிள்ளை வீட்டாருக்கும் அவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் சிலர் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதுபற்றி தகவலறிந்து அந்த பகுதி போலீசார் விரைந்து சென்றனர். அவர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

மணப்பெண்ணின் துணிச்சலான முடிவை அங்குள்ள கலெக்டர் ஜனமேஜய் மஹோபே பாராட்டினார். மேலும் மணமகளின் முடிவுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

அவரது குடும்பத்திற்கு அரசு உதவி வழங்கப்படும் என்று கலெக்டர் கூறினார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

X

Maalai Malar
www.maalaimalar.com