தங்க மோதிரம்: திமுக அரசின் சீரிய நிதி மேலாண்மை செயல்பாட்டினால் இன்று சாத்தியம்- டி.ஆர்.பி. ராஜா

கஜானா காலியாக இல்லை என்பதை இன்றைய ரீல்ஸ் அரசு ஒத்துக்கொள்ளுமா? என்று முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா குறிப்பிட்டுள்ளார்.
டி.ஆர்.பி. ராஜா
டி.ஆர்.பி. ராஜா
Published on

தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பிரசாரத்தின்போது, தாய் மாமன் தங்க மோதிரம் வாக்குறுதியை அளித்தது. அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்கம் மோதிரம் எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த திட்டம் வருகிற செப்டம்பர் 15-ந்தேதி தொடங்கி வைக்கப்படும். முதல்வர் விஜய் பிறந்த தினமான ஜூன் 22-ந்தேதியில் இருந்து பிறந்த குழந்தைகளுக்கு இந்த மோதிரம் கிடைக்கும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் முன்னாள் திமுக அமைச்சரான டி.ஆர்.பி. ராஜா எக்ஸ் பக்க பதவியில் கூறியிருப்பதாவது:-

தங்க மோதிரம்- திமுக அரசின் சீரிய நிதி மேலாண்மை செயல்பாட்டினால் இன்று சாத்தியம். கஜானா காலியாக இல்லை என்பதை இன்றைய ரீல்ஸ் அரசு ஒத்துக்கொள்ளுமா?

திட்டங்களுக்கு நிதி ஒதுக்க ஒதுக்க தமிழ்நாட்டின் நிதி நிலையை மீட்டெடுக்க அயராமல் உழைத்து நிதி நிலமையை சீர் செய்த திராவிட_நாயகன் மு.க. ஸ்டாலினின் திமுக ஆட்சியின் அருமையை மக்கள் புரிந்து கொள்வார்கள். #CMStalinEra

இவ்வாறு டி.ஆர்.பி. ராஜா அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

X

Maalai Malar
www.maalaimalar.com