GOLD PRICE TODAY: காலையில் சரிந்து பிற்பகலில் எகிறிய தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

நேற்று ஒரே நாளில் தங்கம் விலை மூன்று முறை மாறியது.
GOLD PRICE TODAY: காலையில் சரிந்து பிற்பகலில் எகிறிய தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?
Published on

ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல் காரணமாக கடந்த வாரத்தில் இருந்து தங்கம் மற்றும் வெள்ளி விலை குறைந்து வந்தது. இதனால் இந்த வாரமும் தங்கத்தின் விலை குறையுமா? உயருமா? என்ற கேள்வி மக்களிடையே நிலவியது.

சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.13 ஆயிரத்து 620-க்கும், ஒரு சவரன் 1 லட்சத்து 8 ஆயிரத்து 960-க்கும் விற்கப்பட்டது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.13 ஆயிரத்து 620-க்கும், ஒரு சவரன் 1 லட்சத்து 8 ஆயிரத்து 960-க்கும் விற்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து சென்னையில் இன்று (மார்ச் 24) காலை 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,720 குறைந்து ரூ.1,04,000-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.340 குறைந்து ரூ.13,000-க்கு விற்பனை செய்யப்பட்டது.

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று காலை குறைந்தது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.240-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், தற்போது தங்கம் விலை இன்று (மார்ச் 24) இரண்டாவது முறையாக மாறியுள்ளது. காலையில், தங்கம் விலை குறைந்த நிலையில் பிற்பகலில் சவரனுக்கு ரூ. 2000 அதிகரித்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் விலை ரூ. 1,06,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ. 250 அதிகரித்து ரூ. 13,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை ரூ. 10 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 250-க்கும், ஒரு கிலோ வெள்ளி விலை ரூ. 10,000 உயர்ந்து ரூ. 2.50 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

23-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,720

22-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,960

21-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,960

20-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,600

19-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

23-03-2026- ஒரு கிராம் ரூ.250

22-03-2026- ஒரு கிராம் ரூ.250

21-03-2026- ஒரு கிராம் ரூ.250

20-03-2026- ஒரு கிராம் ரூ.260

19-03-2026- ஒரு கிராம் ரூ.265

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com