

தங்கம் விலை கண்ணாமூச்சி ஆட்டம் காட்டி வருகிறது. கடந்த 12-ந்தேதிக்கு பிறகு தொடர்ந்து விலை சரிந்து வந்த நிலையில், கடந்த 23, 24-ந்தேதிகளில் ஒரே நாளில் விலை ஏற்றம்-இறக்கத்தை சந்தித்தது.
இதன் தொடர்ச்சியாக 25ம் தேதி கிராமுக்கு ரூ.350-ம், சவரனுக்கு ரூ.2,800-ம் அதிரடியாக உயர்ந்து காணப்பட்டது. 26ம் தேதி கிராமுக்கு ரூ.70-ம், சவரனுக்கு ரூ.560-ம் உயர்ந்து இருந்தது. பின்னர் மாலையில் கிராமுக்கு ரூ.320-ம், சவரனுக்கு ரூ.2,560-ம் குறைந்தது.
சென்னையில் நேற்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,07,440-க்கு விற்பனை செய்யப்பட்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.13,430-க்கு விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,840 உயர்ந்து ஒரு சரவன் ரூ.1,09,280-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதன்படி, ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.230 உயர்ந்து ரூ.13,660-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், வெள்ளியின் விலை ரூ.5 உயர்ந்த நிலையில் ஒரு கிராம் ரூ.250க்கும், ஒரு கிலோ ரூ.2.50 லட்சத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-
27-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,07,440
26-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,800
25-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,800
24-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,000
23-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,06,720
22-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,960
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-
27-03-2026- ஒரு கிராம் ரூ.245
26-03-2026- ஒரு கிராம் ரூ.260
25-03-2026- ஒரு கிராம் ரூ.260
24-03-2026- ஒரு கிராம் ரூ.250
23-03-2026- ஒரு கிராம் ரூ.250
22-03-2026- ஒரு கிராம் ரூ.250