

அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சசிகலா சட்டமன்றத் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
மகப்பேறு உதவித்தொகை ரூ.18 ஆயிரத்தில் இருந்து ரூ.24 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். நெல் கொள்முதல் விலை குவிண்டால் ஒன்றுக்கு ரூ.3,250 ஆக உயர்த்தப்படும். கரும்பு கொள்முதல் விலை டன் ஒன்றுக்கு ரூ.4,250 ஆக அதிகரிக்கப்படும்.
தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.
மீனவர்களுக்கான டீசல் மானியம் உயர்த்தப்படும். இலவச மடிக்கணினி திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும்.
பட்டியலின, பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகளுக்கு செலுத்தப்படும் கல்வி உதவித்தொகை 50 சதவீதமாக உயர்த்தப்படும்.
அரசு ஊழியர்களுக்கு பலனளிக்கக்கூடிய புதிய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
நகரங்கள் மற்றும் கிராம பகுதிகளில் வசிக்கும் வீடற்ற மக்களுக்கு 5 ஆண்டுகளில் 5 லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும்.
முதியோர் உதவி தொகை ரூ.2 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும் என்பது உள்ளிட்ட 60 தேர்தல் வாக்குறுதிகள் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.