முதலமைச்சர் விஜய்க்கு எதிரான வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.
முதலமைச்சர் விஜய்க்கு எதிரான வழக்குகள்: சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை
Published on: 

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ஆகியோருக=க்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் வழக்குகள் இன்று விசாரணைக்கு வருகின்றன.

முதலமைச்சர் விஜய்க்கு எதிராக நான்கு தேர்தல் வழக்குகள், சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி லட்சுமி நாராயணன் முன் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.

பெரம்பூர் தொகுதி:

முதல்வர் விஜய், பெரம்பூர் தொகுதியில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து, தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி.சேகர் மற்றும் வாக்காளர்கள் தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தனர்.

இதேபோல் திருச்சி கிழக்கு தொகுதியில், விஜய் வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் வழக்கு தாக்கல் செய்திருந்தார்.

நான்கு வழக்குகள்:

இந்த நான்கு வழக்குகளும், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன் இன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

இதுதவிர, வில்லிவாக்கம் தொகுதியில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா வெற்றி பெற்றதை எதிர்த்து தி.மு.க. வேட்பாளர் கார்த்திக் மோகன் மற்றும் சிவராஜ் ஆகியோர் தாக்கல் செய்திருந்த தேர்தல் வழக்குகளும், நீதிபதி லட்சுமி நாராயணன் முன் இன்று விசாரணைக்கு வருகிறது.

X

Maalai Malar
www.maalaimalar.com