முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நண்பர் நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு

கோவைப்புதூர் அருகே ஜே.ஆர்.டி நிறுவனம் கட்டியுள்ள வீடுகள் மற்றும் குடியிருப்புகள் உரிய அனுமதியுடன் கட்டப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.கோவையில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் நெருக்கமானவர் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை ஈடுபட்டனர்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நண்பர் நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு
Published on

கோவை:

கோவை கோவைப்புதூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் நண்பர் ராஜேந்திரனின் ஜே.ஆர்.டி கட்டுமான நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் இன்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

கோவை அருகே உள்ள கோவைப்புதூரில் ஜே.ஆர்.டி. நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனம் கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட் தொழில்களை மேற்கொண்டு வருகிறது.

கோவைப்புதூர் அருகே ஜே.ஆர்.டி நிறுவனம் கட்டியுள்ள வீடுகள் மற்றும் குடியிருப்புகள் உரிய அனுமதியுடன் கட்டப்படவில்லை என்று புகார் எழுந்துள்ளது.

அந்த புகாரின் அடிப்படையில் இன்று கோவை மாநகராட்சி துணை ஆணையர் சர்மிளா தலைமையில் அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

ஜே.ஆர்.டி நிறுவனம் சார்பில் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் உரிய அனுமதியுடன் கட்டப்பட்டுள்ளதா? என்பது குறித்து அதிகாரிகள் தொடர் சோதனையில் ஈடுபட்டு உள்ளனர். நிறுவனத்தில் உள்ள ஆவணங்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

கோவையில் சமீபத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் நெருக்கமானவர் வீடுகளில் வருமான வரி அதிகாரிகள் அதிரடி சோதனை ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து எஸ்.பி.வேலுமணியின் நண்பர் நிறுவனத்தில் மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்தது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com