ரூ.100 கோடி மோசடி வழக்கு- முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு சம்மன்

இளஞ்செழியன் யார் என்றே தனக்கு தெரியாது என முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கூறியிருந்தார்.
TN EX Minster Shivashankar
Published on

திமுக முன்னாள் அமைச்சர் சிவசங்கரின் உதவியாளர் எனக்கூறி மோசடி செய்த இளஞ்செழியனை போலீசார் கைது செய்தனர்.

இளஞ்செழியன் யார் என்றே தனக்கு தெரியாது என முன்னாள் அமைச்சர் சிவசங்கர் கூறியிருந்தார்.

இந்நிலையில், ரூ.100 கோடி வரை மோசடியில் முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கும் தொடர்பு இருப்பதாக முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொடுத்த பணம் வந்து சேர்ந்துவிட்டது என சிவசங்கர் உறுதி கூறி ஏமாற்றியதாக எப்ஐஆர்-ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போக்குவரத்து துறையில் தனது மகனுக்கு வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிவிட்டதாக ஓய்வுபெற்ற பாதிக்கப்பட்ட ஓய்வு பெற்ற எஸ்எஸ்ஐ சீனிவாசன், தலைமைச் செயலகத்தில் சிவசங்கரை சந்தித்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பணமோசடி வழக்கில் எப்ஐஆரில் பெயர் சேர்க்கப்பட்ட நிலையில், விசாரணைக்கு ஆஜராக முன்னாள் அமைச்சர் சிவசங்கருக்கு காவல்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

X

Maalai Malar
www.maalaimalar.com