நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை

கடலில் அலைகள் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. 10 கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.
நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்கள் 2-வது நாளாக கடலுக்கு செல்லவில்லை
Published on

நெல்லை:

நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று கனமழை பெய்தது. வானிலை மையம் ஏற்கனவே நேற்றும், இன்றும் தென்மாவட்டங்களில் கனமழை பெய்யும் என ஆரஞ்சு அலர்ட் விடுத்திருந்தது.

கடலில் அலைகள் சீற்றம் அதிகமாக இருக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதன் காரணமாக முன்எச்சரிக்கை நடவடிக்கையாக நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் மீனவர்கள் நேற்று கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.

தூத்துக்குடி மாவட்டத்தில் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் கரைகளில் படகுகளை நிறுத்தி வைத்தனர்.

இந்நிலையில் இன்று 2-வது நாளாக அவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை. நெல்லை மாவட்டத்திலும் கள்ளக்கடல் எச்சரிக்கையால் நேற்று மீனவ கிராமங்களான கூட்டப்பனை, கூடுதாழை, பெருமணல், உவரி உள்ளிட்ட 10 கிராம மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லவில்லை.

இன்றும் 2-வது நாளாக அவர்கள் கடலுக்கு செல்லாமல் கரைகளில் படகுகளை நிறுத்தி வைத்திருந்தனர். 

X

Maalai Malar
www.maalaimalar.com