

நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு ஆலையில் உள்ள கல்வெட்டை அகற்றுவதாக தவறான தகவல் பரப்பப்படுவதாக சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
சென்னை மெட்ரோ குடிநீர் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
நெம்மேலியில் கடல் நீரை குடிநீராக்கும் சுத்திகரிப்பு ஆலையில் உள்ள கல்வெட்டை 2024 பிப்ரவரியில் அமைக்கப்பட்டு, 24.02.2024 அன்று திறக்கப்பட்டது. சாலையின் அருகாமை மற்றும் கடுமையான வாகன அதிர்வுகள் காரணமாக, 28-6-26 அன்று மேல் பகுதியிலிருந்து சில எழுத்துகள் கற்கள் சரிந்து விழுந்துள்ளன. மேலும் அதை சரிபார்த்ததில், சிறுபாலத்தின் கீழ்ப்பகுதி கற்களும் தளர்ந்த நிலையில் இருப்பது தெரியவந்துள்ளது.
எனவே, பாலக்கற்களைப் பாதுகாக்கவும், விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்க்கவும், நாங்கள் அந்தக் கற்களை எடுத்து 30-6-26 அன்று தனியாக வைத்துள்ளோம்.
கல் பதிக்கும் பணிகளை வலுப்படுத்தும் வகையில், சிறுபாலப்பகுதியில் முகமை பழுதுபார்க்கும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது சிறுபாலக் கற்களில் கூடுதல் திருகுகளைப் பொருத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.
சீரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன, மேலும் அதே சிறுபாலம் புதிய கற்களுடன் 20-7-26 பிற்பகல் 12:30 மணிக்குள் அமைக்கப்படும்.
இவ்வாறு குடிநீர் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
தவறான தகவலை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.